Nilavo – a song

Wrote and composed a Tamil song recently. I’m sharing the lyrics here.

பாடாத பாட்டை பாடும், கேட்காத வார்த்தை கூறும், நிலவோ?
காணாத காட்சி காட்டும்,
ஓயாத ஆசை தூண்டும் நிலவோ?

பகல் இரவு பல வண்ணங்கள்,
வரைத்திடும் இந்த வானத்தை,
நிலவே நீ பூசிக்கொள்ள வா.
நிழலோடு வசிக்கும் உன்னை, ஒளியோடு சேர என்ன தயக்கம்?

இரவு இருட்டு அலைபாயும் இங்கே.
கனவுகள் குளிர் காயும் இங்கே.
வானத்தை ஒளிர்த்திட வா.

நொடி, ஆண்டுகள் ஆகும்முன்னே.
படி, பாதைகள் ஆகும்முன்னே.
என்னோடு சேர்ந்து செல்ல வா.

மின்மினிகளின் கூட்டம் உன் கண்ணில் நான் பார்த்துக்கொண்டேன்
அந்த கண்களை தானே நான்  வியக்கிறேன்

பகல் இரவு பல வண்ணங்கள்,
வரைத்திடும் இந்த வானத்தை,
நிலவே நீ பூசிக்கொள்ள வா.
நிழலோடு வசிக்கும் உன்னை, ஒளியோடு சேர என்ன தயக்கம்?

நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்த அந்த நேரம்
வானில் மேகம் போல ஊர்வலம் போகும்

கண் விழித்து நானும் அதை தானே தினம் பார்க்கின்றேன்,
கையில் வந்திடுமா தொலைந்த நேரம்?

தினம் தினம் எதிர் பார்க்கின்றேன்,
கேட்பேனா உன் குரலை?
கண்ணா, என்னை மீண்டும் வெல்ல வா.
நிழலோடு வசிக்கும் என்னை ஒளியோடு சேர்க்க நீயே வருவாயா?

© Vidya Venkat (2022)

Published by Vidya Venkat

Ph.D. candidate in Anthropology at SOAS, London. Formerly, journalist at The Hindu, Chennai.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: